உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வீட்டு பீரோவில் இருந்த 22 சவரன் நகை மாயம் போலீஸ் தீவிர விசாரணை

வீட்டு பீரோவில் இருந்த 22 சவரன் நகை மாயம் போலீஸ் தீவிர விசாரணை

அரியாங்குப்பம்: வீட்டில் பீரோவில் இருந்த 22 சவரன் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.தவளக்குப்பம் அடுத்த காசாந்திட்டு பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார், 30; இவர் தனியார் ஹோட்டலில் மேலாளராக பணி செய்து வருகிறார். இவரது தாயார் தனது 22 சவரன் தங்க நகைகளை வீட்டு பீரோவில் வைத்திருந்தார்.இந்நிலையில், உறவி னரின் சுப நிகழ்ச்சிக்கு செல்வதற்காக, கடந்த 7ம் தேதி, அவரது தாய் பீரோவை திறந்து பார்த்த போது, நகைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டில் பல்வேறு இடங்களில் தேடியும் நகைகளை காணவில்லை. காணாமல் போன நகைகளின் மதிப்பு 13 லட்சம் ரூபாயாகும்.சதிஷ்குமார் புகாரின் பேரில் தவளக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, நகைகள் மாயமானது குறித்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராவை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !