ரயில் பயணிகளிடம் போலீசார் சோதனை
குட்கா கடத்தி வந்த உ.பி., வாலிபர் கைதுபுதுச்சேரி: புதுச்சேரி வந்த புவனேஸ்வர் ரயில் பயணிகளிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வந்த உத்தர பிரதேச வாலிபரை கைது செய்தனர்புதுச்சேரிக்குள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வரும் வழியை தடுக்கும் வகையில், புவனேஷ்வரில் இருந்து புதுச்சேரி வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் ஒதியஞ்சாலைபோலீசார் சோதனையில் ஈடுப்பட்டனர்.நேற்று மதியம் 12:30 மணிக்கு புதுச்சேரி ரயில் நிலையம் வந்த புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளிடம், எஸ்.பி., ரகுநாயகம், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்இன்ஸ்பெக்டர் ஜாகீர்உசேன் தலைமையிலான போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் பைரவா துணையுடன் சோதனையில் ஈடுப்பட்டனர்.ஒடிசாவில் இருந்து ஏராளமான பாக்கெட்டுகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கொண்டு வந்த உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பைசாபாத் சுல்தான்அகமது, 31; என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.