உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரயில் நிலையத்தில் போலீஸ் சோதனை

ரயில் நிலையத்தில் போலீஸ் சோதனை

புதுச்சேரி: புதுச்சேரி வந்த புவனேஸ்வர் ரயில் பயணிகளிடம் போதை தடுப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் போதைப்பொருள் கலாசாரம் அதிகரித்து வருவதுடன், வெளி மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில், புவனேஸ்வரிலிருந்து ரயில் புதுச்சேரிக்கு நேற்று மதியம் வந்தது. போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ், ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் மோப்ப நாயுடன் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என ரயில் பயணிகளிடம் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில், தடைசெய்யப்பட்ட பொருட்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. எனினும், பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இது போன்ற சோதனைகள் தொடரும் என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை