உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வந்தே மாதரம் 150 ஆண்டுகள் நினைவு கூர்ந்த போலீசார்

வந்தே மாதரம் 150 ஆண்டுகள் நினைவு கூர்ந்த போலீசார்

வில்லியனுார்: வில்லியனுார் போலீசார் பள்ளி மாணவர்களுடன் இணைந்து, 'வந்தே மாதரம்' பாடல் இயற்றப்பட்டு, 150 ஆண்டுகள் ஆனதை போற்றும் வகையில், பாடலைப் பாடி தேசப்பற்றை நினைவு கூர்ந்தனர். இந்திய தேசத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவு கூறுவது போன்று, இந்திய தேசத்தின் தேசிய பாடலான 'வந்தே மாதரம்' பாடல் இயற்றப்பட்டு 150வது ஆண்டை கொண்டாடும் வகையில், வில்லியனுார் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., சுப்ரமணியன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் முன்னிலையில் தேசப்பற்று நினைவு கூறும் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. விழாவில் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து வந்தே மாதரம் பாடலை பாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ