மேலும் செய்திகள்
பேனர் வைத்தவர் மீது வழக்கு பதிவு
24-Jun-2025
புதுச்சேரி: போக்குவரத்திற்கு இடையூறாக பேனர் வைத்தவர்கள் மீது, புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் ஜெயராஜ், இந்திரா சிக்னல் அருகே ஆய்வு பணியில் ஈடுபட்டார். அப்போது, நடைபாதையில், போக்குவரத்திற்கு இடையூறாக பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதையடுத்து, பேனர் வைத்த நபர் மீது, உருளையன்பேட்டை போலீசில் அவர் புகார் செய்தார்.அதே போல, ராஜிவ் சிக்னல் அருகே சாலையில் பேனர் வைத்த நபர் மீது அவர் புகார் செய்தார். அதன்பேரில், டி.நகர் போலீசார் வழக்கு பதிந்தனர். தொடர்ந்து, வில்லியனுார் எம்.ஜி.ஆர்., சிலை அருகே அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, உதவிப் பொறியாளர் வில்லியனுார் போலீசில் புகார் செய்தார். பேனர் வைத்த நபர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
24-Jun-2025