உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பேனர் விழுந்து போலீஸ் கான்ஸ்டபிள் காயம் 

பேனர் விழுந்து போலீஸ் கான்ஸ்டபிள் காயம் 

நெட்டப்பாக்கம்: திருக்கனுார் அடுத்த செல்லிப்பட்டு ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார், 33; ஐ.ஆர்.பி.என்., போலீஸ். இவர் நேற்று முன்தினம் மாலை கரியமாணிக்கம் - சூரமங்கலம் சாலையில் வந்து கொண்டிருந்தார். அங்கு தனியார் திருமண நிலையம் அருகில் மரத்தில் கட்டப்பட்டிருந்த மனை விற்பனை விளம்பர பேனர், சிவக்குமார் மீது அறுந்து விழுந்தது. இதில் பைக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் மோதி, சிவக்குமார் கீழே விழுந்தார்.படுகாயமடைந்த சிவக்குமார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் அளித்த புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை