உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  5ம் வகுப்பு மாணவி சாவு போலீசார் விசாரணை

 5ம் வகுப்பு மாணவி சாவு போலீசார் விசாரணை

திருக்கனுார்: திருக்கனுார் காலனி, பள்ளிவாசல் வீதியை சேர்ந்தவர் சுதாகர், 32; கூலி தொழிலாளி. இவருக்கு குணசுந்தரி என்ற மனைவியும், 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரது 2வது மகள் நிவிதா, 10; அங்குள்ள அரசு பெண்கள் தொடக்கப் பள்ளியில் 5 வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை நிவிதா தனது தாயிடம் வயிறு வலிப்பதாக கூறினார். இதையடுத்து, குணசுந்தரி, நிவிதாவை திருக்கனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றார். அங்கு, சிகிச்சை அளிக்கப்பட்ட பின் வீட்டிற்கு வந்த நிவிதா மாலை 5:30 மணி அளவில் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த குணசுந்தரி மீண்டும், நிவிதாவை திருக்கனுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றார். பின், மேல் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிவிதாவை பரிசோதனை செய்த டாக்டர், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். குணசுந்தரி அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ