அரசு ஊழியர் சாவு போலீசார் விசாரணை
புதுச்சேரி : கோரிமேடு, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் அருள்ராஜ், 43. இவர், புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறையில் யு.டி.சி., யாக பணி செய்தார். இவருக்கு கடந்த மாதம் உடல்நிலை சரியில்லை என கூறி நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.அப்போது அவருக்கு கணையத்தில் கட்டி இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அறுவை சிகிச்சையின் போது அருள்ராஜ் வயிற்றில் காட்டன் பஞ்சு வைத்து தைத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன், அருள்ராஜ் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு கோரிமேடு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அருள்ராஜிக்கு கணையத்தில் புற்றுநோய் இருப்பதாக கூறி அவருக்கு ஸ்கேன் செய்துள்ளனர்.அப்போது அருள்ராஜ் வயிற்றில் காட்டன் பஞ்சு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அதனை அறுவை சிகிச்சை மூலம் கோரிமேடு மருத்துவனையில் அகற்றியுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை அருள்ராஜ் இறந்து விட்டார். புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.