மேலும் செய்திகள்
வாய்க்காலில் மூழ்கி பஸ் டிரைவர் பலி
14-May-2025
பாகூர்: விவசாயி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலூர் மாவட்டம், வழிசோதனைபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன், 39; விவசாயி. இவர் நேற்று முன்தினம் காலை, அவரது மனைவி ஆந்தியிடம் தான் வெளியே சென்று விட்டு வருவதாக கூறி விட்டு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர், அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், பாகூர் அடுத்த சோரியாங்குப்பத்தில் உள்ள தனியார் மதுபானக் கடையில் மது அருந்திய நிலையில் சுய நினைவற்று கிடைப்பதாக தகவல் கிடைத்துள்ளது.அவரது குடும்பத்தினர் அங்கு சென்று விசாரித்தபோது, பத்மநாபனை கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருப்பது தெரியவந்தது. மருத்துவமனைக்கு சென்று டாக்டர்களிடம் கேட்ட போது, பத்மநாபன் வரும் வழியில் இறந்து விட்டதாகவும் அவரது உடல் சவகிடங்கில் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, அவரது சகோதரர் தனசேகரன், 32; பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, பத்மநாபன் இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனர்.
14-May-2025