உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சமூக ஆர்வலர் வீட்டில்  நள்ளிரவில் நுழைந்த நபர் போலீசார் விசாரணை

சமூக ஆர்வலர் வீட்டில்  நள்ளிரவில் நுழைந்த நபர் போலீசார் விசாரணை

புதுச்சேரி : புதுச்சேரியில் சமூக ஆர்வலர் வீட்டில் நள்ளிரவில் அத்து மீறி நுழைந்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.அண்ணா சாலை, திருமுடி நகரை சேர்ந்தவர் பாலா. புதுச்சேரி மாநில மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர். இவர், நேற்று முன்தினம் இரவு தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் வீட்டில் துாங்கி கொண்டிருந்தார்.நள்ளிரவு 2:00 மணிக்கு, மர்ம நபர் ஒருவர் அவரது வீட்டின் படிக்கட்டில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு ெஷட்டரை திறந்து மாடிக்கு சென்றார்.அங்கு இருந்த கிரீல் கேட் மற்றும் அறை கதவை ஓங்கி அடித்தார். இதைத்தொடர்ந்து பாலா, தன்னை யாரோ கொலை செய்ய முயற்சிப்பதாகவும், காப்பாற்றும் படியும் அலறினார். சத்தத்தை தொடர்ந்து மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றார்.இது குறித்து பெரியக்கடை போலீசில் அவர் புகார் அளித்தார். போலீசார் சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !