உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை

 தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை

புதுச்சேரி: ஏம்பலம் அடுத்த கீழ் சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வம், 42; கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 7 வயதில் ஒரு மகன் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள இவர், அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். நேற்று முன்தினம் காலை திடீரென தனியாக பேசிக் கொண்டிருந்தார். அவரை உறவினர்கள் கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, சிகிச்சை பெற்று வீட்டிற்கு அழைத்து வந்தனர். இந்நிலையில், அவர், வீட்டில் மின் விசிறியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை