உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொழிலாளி சாவு போலீசார் விசாரணை

தொழிலாளி சாவு போலீசார் விசாரணை

பாகூர்: சாராயக்கடை அருகே சுமை துாக்கும் தொழிலாளி இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கடலுார் மாவட்டம், கோண்டூர் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் முத்துராமன், 52; சுமை துாக்கும் தொழிலாளி. மதுபோதைக்கு அடிமையான இவர், வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். நேற்று முன்தினம் சோரியாங்குப்பம் சாராயக்கடையில் மது குடித்து விட்டு, சாலையோரம் மயங்கி கிடந்தார். அவரை, கோண்டூரை சேர்ந்த ரங்கநாதன் என்பவர், எழுப்பியது போது, அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ