உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொழிலாளி சாவு போலீசார் விசாரணை

தொழிலாளி சாவு போலீசார் விசாரணை

திருக்கனுார் : கூலி தொழிலாளி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருக்கனுார் அடுத்த சுத்துக்கேணியை சேர்ந்தவர் சபாபதி, 55; கூலி தொழிலாளி. குடிப்பழக்கமுடைய இவர், காசநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 18ம் தேதி இரவு ஓவர் போதையில் வீட்டிற்கு வந்த அவர், சாப்பிட்டு துாங்கியுள்ளார்.மறுநாள் 19ம் தேதி மதியம் வரை எழுந்திரிக்காததால், சந்தேகமடைந்த அவரது மனைவி சமிதா, சபாபதியை கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு, டாக்டர் பரிசோதித்து, அவர் இறந்துவிட்டதாக கூறினர்.காட்டேரிக்குப்பம் போலீ சார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை