தொழிலாளி பலி போலீசார் விசாரணை
பாகூர் : பூச்சி கொல்லி மருந்து சாப்பிட்ட கூலி தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.கிருமாம்பாக்கம் அடுத்த வண்ணாங்குளத்தை சேர்ந்தவர் மாயவன், 48; விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி சுதா. இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மாயவன் கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பிரச்னை காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதில், மனமுடைந்த அவர் கடந்த 5ம் தேதி, பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டார்.காலாப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாயவன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.