உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டாக்டர் மர்ம சாவு போலீஸ் விசாரணை

டாக்டர் மர்ம சாவு போலீஸ் விசாரணை

புதுச்சேரி : மர்மமான முறையில் ஜிப்மர் டாக்டர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பெங்களூருவைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன், 51; ஜிப்மர் டாக்டர். இவர், லாஸ்பேட்டை எழில் நகரில் உள்ள என்கிலேவ் அப்பார்ட்மென்ட் 2 தளத்தில் தனியாக வசித்து வந்தார். கடந்த 1ம் தேதி முதல் பணிக்கு செல்லவில்லை.இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. தகவலறிந்த லாஸ்பேட்டை போலீசார் நேரில் சென்று, ஆதிநாராயணன் வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அறையில் அழுகிய நிலையில் ஆதிநாராயணன் இறந்து கிடந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ