உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண் மர்ம சாவு போலீஸ் விசாரணை

பெண் மர்ம சாவு போலீஸ் விசாரணை

காரைக்கால்: காரைக்காலில் படுக்கையறையில் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.காரைக்கால், ராஜாத்தி நகரில் உள்ள ஒரு வீட்டின் படுக்கை அறையில், பெண் ஒருவர் நேற்று மாலை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.விசாரணையில், இறந்தவர் திருநள்ளார் பகுதியை சேர்ந்த வினோதினி, 26, என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக நகர் பகுதியை சேர்ந்த தயாளன், 30, என்பவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை