உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தொழிலாளி சாவு போலீஸ் விசாரணை

 தொழிலாளி சாவு போலீஸ் விசாரணை

நெட்டப்பாக்கம்: அதிகமாக குடித்த கூலித் தொழிலாளி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலுார் மாவட்டம், முள்ளிகிராம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ், 45; கூலித்தொழிலாளி. இவர், புதுச்சேரி, பண்டசோழநல்லுாரில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்தார். குடிப்பழக்கம் உள்ள இவர், அதே பகுதியில் உள்ள சாராயக் கடையில் நேற்று அதிகாலை சாராயம் குடித்துவிட்டு நாக்கு வரண்டு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ