முதியவர் மீது தாக்குதல் 3 பேருக்கு போலீஸ் வலை
நெட்டப்பாக்கம்: தவணை தொகை கட்ட வலியுறுத்தி முதியவரை தாக்கிய நிதி நிறுவன ஊழியர்கள் மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.நெட்டப்பாக்கம், மேட்டு தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை, 61. இவர், ஆயில் ஸ்டோர் நடத்தி வருகிறார். இவர், கடந்த 3 வருடங்களுக்கு முன், தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றிருந்தார். அதில் இரண்டு மாதம் தவணை தொகை கட்டவில்லை.இந்நிலையில், கடந்த 4ம் தேதி அண்ணாதுரை அவரது கடையில் இருக்கும் போது, நிதி நிறுவன ஊழியர்கள் ராதாகிருஷ்ணன், வினோத், சிவபாலன் ஆகிய மூவரும் சென்று, தவணை தொகையை கட்டுமாறு கூறி, ஆபாசமாக பேசி தாக்கினர்.அண்ணாதுரை அளித்த புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து மூவரையும் தேடி வருகின்றனர்.