உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தீபாவளி பண்டிகையொட்டி போலீசார் ரோந்து பணி

தீபாவளி பண்டிகையொட்டி போலீசார் ரோந்து பணி

புதுச்சேரி: தீபாவளி பண்டிகையையொட்டி, தட்டாஞ்சாவடி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகை முன்னிட்டு, டி.நகர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை பகுதியில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். கடைகளில் கூட்ட நெரிசல் தவிர்க்குமாறு அறிவுறுத்தினர். சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை, ஒழுங்குபடுத்தினர். மேலும், பட்டாசு கடைகளில், பாதுகாப்புடன் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகிறதா, என, போலீசார் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ