போலீசார் பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்
புதுச்சேரி : புதுச்சேரி டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் உத்தரவின் பேரில், சுதந்திர தினத்தை முன்னிட்டு கடலோர போலீசார் - பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் சோலை நகரில் நடந்தது. சப் இன்ஸ்பெக்டர் பக்தவச்சலம் தலைமை தாங்கினார். இதில், போலீசார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சுதந்திர தினத்தை முன்னிட்டு கடல் வழியாக எந்தவித அசம்பாவித செயல்களும் நடக்காமல் தடுக்க, கடலோர போலீசார் மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கடற்கரை பகுதிகளில் புதிய நபர்கள் நடமாட்டம், கடலில் ஏதேனும் சந்தேகப்படும்படியான படகுகள் மற்றும் பொருட்கள் தெரிந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது, மீன்வளத் துறை மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை, மீன்பிடி படகிற்கான ஆவணங்களை எடுத்து செல்லுமாறு போலீசார் அறிவுறு த்தினர்.