மேலும் செய்திகள்
பெரியக்கடையில் குட்கா பறிமுதல்
21-Oct-2024
திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.பள்ளிகள் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு, தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்ட ஆலோசகர் சூர்யகுமார், காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலையிலான குழுவினர் நேற்று ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பெட்டிகளில் திடீர் சோதனை செய்தனர்.அப்போது, கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் உள்ளதா என ஆய்வு செய்தனர். பள்ளிகள் அருகே குட்கா பொருட்கள் விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.தொடர்ந்து, அந்த பகுதியில் குட்கா பொருட்கள் பயன் படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர். இதில், சீனியர் கிரேடு சப் இன்ஸ்பெக்டர் லுார்துநாதன், டாக்டர்கள் பாலாஜி, வசந்தராஜ் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
21-Oct-2024