போலீஸ் ஸ்டேஷன் திறப்பு
புதுச்சேரி: புதுச்சேரி இ.சி.ஆரில்., ரூ.2.74 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள லாஸ்பேட்டை, போலீஸ் ஸ்டேஷன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில், கவர்னர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு போலீஸ் ஸ்டேஷன் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். இதில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தலைமை செயலர் சரத் சவுகான், டி.ஜி.பி., ஷாலினி சிங், ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா, டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பிக்கள், கலைவாணன், நித்யா ராதாகிருஷ்ணன், ஈஷா சிங், எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்த புதிய கட்டடத்தில் தரைத்தளத்தில் முகப்பு வளாகம், நிலைய அதிகாரி அறை, எழுத்தர் அறை ஆகியவையும், முதல் தளத்தில் ஆலோசனைகூடம், காவலர் ஓய்வு அறை, ஆயுத கிடங்கு, இன்ஸ்பெக்டர் அலுவலகம் மற்றும் 2-ம் தளத்தில் பதிவாளர் அறை, குற்றம் மற்றும் குற்றப்பின்னணி கண்காணிப்பு தகவல் அறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.