உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்

குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்

புதுச்சேரி : ரவுடிகளின் தொடர் குற்றச் சம்பவங்களை தடுக்கவே போலீசில் குண்டர் தடுப்புக் காவல் சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இச்சட்டத்தை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், சின்னஞ்சிறிய மாநிலமான புதுச்சேரியில், இந்த சட்டம் சரிவர பயன்படுத்தப்படுவதில்லை. அப்படியே போலீசார், ரவுடிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரைத்தாலும், வருவாய் துறையில் பல்வேறு விளக்கங்கள் கேட்டு, கோப்புகள் திருப்பி அனுப்பப்படுகிறது. இவ்வாறு கடந்தாண்டு நடந்த தொடர் கொலை சம்பவம் தொடர்பாக 6 ரவுடிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய போலீசார் பரிந்துரைத்தனர். ஆனால், அனைத்து கோப்புகளும் போதிய விளக்கங்கள் இல்லை என்ற காரணத்தினால், திருப்பி அனுப்பப்பட்டது. இந்நிலையில், அந்த 6 ரவுடிகளும் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். இதுபோன்று ரவுடிகளுக்குள் நடக்கும் கொலையை தடுக்க குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை பயன்படுத்த போலீசாருக்கு அரசு உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை