மேலும் செய்திகள்
காமராஜர் நினைவு நாள்
03-Oct-2025
புதுச்சேரி: பாதுகாப்பு பணியின் போது உயிரிழந்த போலீசார்களின் நினைவை போற்றும் விதமாக புதுச்சேரியில் காவலர் வீரவணக்க நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. நாடு முழுதும் பாதுகாப்பு பணியின்போது, வீரத்தீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த போலீசார்களின் நினைவை போற்றும் வகையில், ஆண்டு தோறும் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, புதுச்சேரி, கோரிமேட்டில் உள்ள போலீஸ் மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் நேற்று காலை அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், அரசு கொறடா ஆறுமுகம் ஆகியோர் காவலர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மலர் துாவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ரங்கசாமி ஏற்றுக் கொண்டார். முன்னதாக, மரணமடைந்த போலீசாருக்கு 21 குண்டுகள் முழங்க அஞ்சலியும், 2 நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதில், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி.,க்கள் கலைவாணன், நித்யா ராதாகிருஷ்ணன், பிரவீன்குமார் திரிபாதி மற்றும் எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
03-Oct-2025