ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
புதுச்சேரி: மண்ணாடிபட்டு மற்றும் திருபுவனை சட்டசபை தொகுதிகளின் ஓட்டுச்சாவடி முகவர்களின் ஆலோசனைக் கூட்டம் ராஜிவ்காந்தி அரசு கால்நடை மருத்துவக் கல்லுாரியில் நடந்தது. வாக்காளர் பதிவு அதிகாரி குமரன் முன்னிலையில் நடந்த கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அதிகாரியாகன கலெக்டர் குலோத்துங்கன், ஓட்டுச்சாவடி முகவர்களின் கருத்துகளையும் மற்றும் ஆலோசனைகளையும் கேட்டறிந்தார். அவர் பேசுகையில், புதுச்சேரியில் பிழையில்லா வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கு தேர்தல் அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக் கொண்டார்.