உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருமண உதவியாக 4 கிராம் தங்கம் விவசாய தொழிலாளர் மாநாட்டில் தீர்மானம்

திருமண உதவியாக 4 கிராம் தங்கம் விவசாய தொழிலாளர் மாநாட்டில் தீர்மானம்

புதுச்சேரி : பெண்கள் திருமண உதவியாக 4 கிராம் தங்கம், 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டுமென புதுச்சேரி விவசாயத் தொழிலாளர் சங்க தொகுதி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஏம்பலம் வி.டி.பி., மகாலில் நடந்த மாநாட்டிற்கு முத்துலட்சுமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராமமூர்த்தி சங்கக் கொடியை ஏற்றி மாநாட்டை துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் ராஜவேலு, தலைவர் விசுவநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொகுதி செயலாளர் நாகராஜ் அறிக்கை வாசித்தார்.ஏம்பலம் தொகுதி புதிய தலைவராக சின்னத்தம்பி, துணைத் தலைவர்களாக முத்துலட்சுமி, சுகுணா, செயலாளராக நாகராஜ், துணை செயலா ளர்களாக சுகுணா, ஏகாம்பரம், பொருளாளராக குமுதவள்ளி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:இலவச மனைப்பட்டா, வீடுகட்ட மான்யம் 3 லட்சம். தீபாவளிக்கு ஆயிரம் ரூபாய் போனஸ், இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 100 நாள் வேலையை, 200 நாட்களாக உயர்த்தி நாள் கூலி 150 ரூபாய் வழங்க வேண்டும். நத்தமேடு கிராமத்தில் இலவச மனைகளை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாரபட்சம் இல்லாமல் வழங்க வேண்டும். விளை நிலங்களை மனைப்பட்டாவாக மாற்றுவதை தடை செய்ய வேண்டும். பெண்கள் திருமண உதவியாக 4 கிராம் தங்கம், 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி