மேலும் செய்திகள்
வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சம் அரட்டை செயலியில்: பயனர்கள் வரவேற்பு
2 hour(s) ago | 4
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
3 hour(s) ago | 3
புதுச்சேரி:ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியின் வெள்ளி விழாவை முன்னிட்டு, விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது.புதுச்சேரியில் நவோதயா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளி, கதிர்காமத்தில் 1986ல் துவக்கப்பட்டு, பிறகு ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியாக 1990 முதல் காலாப்பட்டில் செயல்பட்டு வருகிறது.இப்பள்ளி, தனது 25ம் ஆண்டைப் பூர்த்தி செய்கிறது. இந்த வெள்ளி விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக வெள்ளி விழா விளையாட்டுப் போட்டிகள், வரும் 26ம் தேதி வரை நடக்கிறது. இதன் துவக்க விழா, பள்ளி மைதானத்தில் நடந்தது. பள்ளி முதல்வர் வினயத்தான் தலைமை தாங்கினார். முதல் போட்டியாக ஜூனியர் மாணவிகள் கோகோ போட்டி நடந்தது.போட்டி ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் பாலசுப்ரமணியம், அறிவழகன் செய்துள்ளனர்.
2 hour(s) ago | 4
3 hour(s) ago | 3