மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
3 hour(s) ago | 9
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
4 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
5 hour(s) ago
புதுச்சேரி:'புதுச்சேரி-பெங்களூரு இடையே வரும் அக்டோபரில் விமான சேவை துவக்கப்படும்' என, அமைச்சர் ராஜவேலு கூறினார்.புதுச்சேரி சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:கார்த்திகேயன்: புதுச்சேரியில் தேசிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் அரசுக்கு உள்ளதா... இல்லையென்றால், தற்காலிகமாக சிறிய விமானங்கள் இயக்கப்படுமா.அமைச்சர் ராஜவேலு: புதுச்சேரி விமான நிலைய முதல் நிலை விரிவாக்கத்தில், ஏடிஆர் வகை சிறிய விமானங்கள் தரையிறங்கத் தேவையான ஓடுதள விரிவாக்கம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டன. இரண்டாம் நிலை விரிவாக்கத்தில் தமிழக எல்லையில் உள்ள 200 ஏக்கர் நிலத்தில், பெரிய ஜெட் வகை விமானங்களை இயக்குவதற்கு மேலும் தேவையான 100 மீட்டர் ஓடுதளம் கூடுதலாக ஏற்படுத்தும் திட்டம் உள்ளது.ஏற்கெனவே, 1222 மீட்டராக இருந்த விமான ஓடுதளம், தற்போது 1482 மீட்டராக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.விமான நிலையத்தில் 300 பயணிகள் வரை வந்து செல்வதற்கு ஏதுவாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.வரும் டிசம்பருக்குள் அனைத்துப் பணிகளும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரி, பெங்களூரு நகரங்களுக்கு இடையே வரும் அக்டோபர் 10ம் தேதி முதல் ஏடிஆர்.72 வகை விமான சேவையைத் துவக்க, ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனம், மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் ஒப்புதல் பெற்றுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
3 hour(s) ago | 9
4 hour(s) ago | 1
5 hour(s) ago