உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சமுதாய நலப்பணித் திட்டம் ஒருங்கிணைப்பாளர் நியமனம்

சமுதாய நலப்பணித் திட்டம் ஒருங்கிணைப்பாளர் நியமனம்

புதுச்சேரி : சமுதாய நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பா ளராக ஆசிரியர் திமோத் நியமிக்கப்பட்டுள்ளார். என்.எஸ்.எஸ்., இணைப்பு அலுவலர் ராஜன் செய்திக் குறிப்பு: புதுச்சேரி மாநிலத்தில் நாட்டு நலப் பணித் திட்டத்தின் ஒரு பகுதியாக சமுதாய நலப்பணித் திட்டம் உயர்நிலைப் பள்ளிகளில் 2003ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. சமுதாய நலப்பணித் திட்டத்திற்கு தனிஒருங்கிணைப்பாளராக காந்தி நகர் அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திமோத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் புதுச்சேரி உயர்நிலைப்பள்ளிகளில் உள்ள சமுதாய நலப்பணித் திட்ட அலுவலர்களை வழி நடத்தி செல்லவார். இவருக்கு என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர்கள் வாசுகி, பூபதி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை