உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரைக்கால் தாசில்தாரின் புதுச்சேரி வீட்டில்சி.பி.ஐ., அதிகாரிகள் 9 மணி நேரம் சோதனை

காரைக்கால் தாசில்தாரின் புதுச்சேரி வீட்டில்சி.பி.ஐ., அதிகாரிகள் 9 மணி நேரம் சோதனை

புதுச்சேரி:காரைக்காலில் பண்ணைக்குளம் வெட்டுவதற்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் உட்பட 3 பேர் நேற்று முன்தினம் இரவு கைது செ#யப்பட்டனர். இதையடுத்து தாசில்தார் சங்கரின் புதுச்சேரி வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சுமார் 9 மணி நேரம் சோதனை நடத்தினர்.காரைக்கால் திருநள்ளார் தாசில்தார் சங்கர். இவர் மீது பல்வேறு புகார்கள் இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் பண்ணைக் குளம் வெட்டுவதற்கு வினோத் என்பவரிடம் 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது சி.பி.ஐ., அதிகாரிகளிடம் கையும் களவுமாக சிக்கினார். மேலும் அலுவலகத்தில் கணக்கில் காட்டாத 29 ஆயிரத்து 700 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செ#தனர். இவருடைய வீடு, புதுச்சேரி மூலக்குளம் அருகே உள்ள அன்னை தெரசா நகர் மூன்றாவது குறுக்குத் தெருவில் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை சி.பி.ஐ., இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் 4 பேர் வந்தனர்.வீட்டில் இருந்த தாசில்தாரின் சகோதரிகள் 2 பேர் மற்றும் சகோதரியின் கணவர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது இருந்த நகை, பணம் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட விவரங்களை சேகரித்தனர். இறுதியில் முக்கிய ஆவணங்கள் சிலவற்றை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளனர். நேற்று அதிகாலை தொடங்கிய விசாரணை மாலை 3.50 மணிக்கு முடிந்தது. சுமார் 9 மணி நேரம் நடந்த விசாரணையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.காரைக்கால் வீட்டிலும் சோதனை: காரைக்காலில் தாசில்தார் சங்கர் தங்கியிருந்த வள்ளலார் நகர் வீட்டிலும், தேனூர் சாலையில் உள்ள கிளர்க் முரளியின் வீட்டிலும் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர். நேற்று காலை திருநள்ளார் தாசில்தார் அலுவலகத்திலும் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.இதற்கிடையே தாசில்தார் சங்கர் உட்பட 3 பேர் நேற்று மதியம் காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில், நீதிபதி மார்கிரேட் ரோசலின் முன் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் சிறையில் அடைக்கப்பட்டனர்.இதுகுறித்து சி.பி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில், தாசில்தார் சங்கர் மீது ஏராளமான புகார்கள் வந்துள்ளன. அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 20க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 40 லட்சத்திற்கும் அதிகமாக பணம் வாங்கியுள்ளதாக புகார் வந்துள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை