மேலும் செய்திகள்
விஜய் மீது வழக்கு போட்டு கைது செய்தால் வழக்கே நிற்காது: அண்ணாமலை
1 hour(s) ago | 7
புதுச்சேரி:செம்படுகை நன்னீரகம் சார்பில் உலக ஓசோன் நாள் கருத்தரங்கம், நல்லாசிரியர் விருது பெற்ற ஓவியர் அன்பழகனுக்கு பாராட்டு விழா, இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ், தாமரைக்கோ, சுற்றுச்சூழல் பாதுகாப்பு கழகத் தலைவர் ஜோசப் விக்டர்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.உலக அளவிலும், இந்தியாவிலும், புதுச்சேரியிலும் இன்றைய சுற்றுச்சூழல் சிக்கல்கள், புதுச்சேரியில் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களின் பங்கு உள்ளிட்ட தலைப்புகளில் சிறப்பு விருந்தினர்கள் பேசினர்.நல்லாசிரியர் விருது பெற்ற அன்பழகனுக்கான பாராட்டு விழாவில், பள்ளி முதல்வர் வேல்முருகன், ஓவியர் இபேர் உள்ளிட்டோர் பேசினர்.நிகழ்ச்சிக்கு செம்படுகை நன்னீரகம் தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். தமிழ்நெஞ்சன் வரவேற்றார். ஓவியர் இளமுருகு நன்றி கூறினார்.
1 hour(s) ago | 7