மேலும் செய்திகள்
பாஜ தேர்தல் மேலாண்மை குழு அமைப்பு
2 hour(s) ago
புதுச்சேரி:முத்தியால்பேட்டை பகுதியில் பெயின்டர் உள்ளிட்ட இருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.வாழைக்குளம் முருகேச கிராமணி தோட்டத்தைச் சேர்ந்தவர் ஆதிசேஷன், 49; பெயின்டர். குடி பழக்கம் உள்ள இவர் கடந்த சில நாட்களாக சரிவர வேலைக்கு செல்லாததால், மது குடிக்க பணம் இல்லாமல் இருந்தார். இதனால், விரக்தியடைந்த ஆதிசேஷன் நேற்று முன்தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.மற்றொரு சம்பவம் :சின்னையாபுரம் ராஜகோபால் கிராமணி தோட்டத்தில் வசித்தவர் மணிகண்டன் (எ) சதீஷ், 32. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் நேற்று முன்தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இவ்விரு சம்பவங்கள் குறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 hour(s) ago