உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொங்கல் விளையாட்டு பரிசளிப்பு

பொங்கல் விளையாட்டு பரிசளிப்பு

புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதியில் பொங்கலை முன்னிட்டு சப்தரி அறக்கட்டளை சார்பில் நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. புதுச்சேரி, லாஸ்பேட்டை தொகுதிக்குட்பட்ட நெசவாளர் நகரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சப்தகிரி அறக்கட்டளை சார்பில், பெண்களுக்கான கோலம், சிறுவர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவிற்கு, முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமை தாங்கினார். சப்தகிரி அறக்கட்டளையின் பொறுப்பாளர் ரமேஷ் குமார் முன்னிலை வகித்தார்.போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர்கள், சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சப்தகிரி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந் தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை