| ADDED : டிச 31, 2025 03:32 AM
புதுச்சேரி: ரேஷன் கார்டுகளுக்கு ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு வரும் 3ம் தேதி முதல் வழங்கப்படும் என கான்பெட் நிறுவனம் அறிவித்துள்ளது. புதுச்சேரி அரசு, இந்தாண்டு அரசு ஊழியர், கவுரவ ரேஷன் கார்டு நீங்கலாக மற்ற அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பச்சரிசி - 4 கிலோ, நாட்டு சர்க்கரை- 1 கிலோ, பாசிபருப்பு -1 கிலோ, நெய்-300 கிராம், சன்பிளவர் சமையல் எண்ணெய்-1 லிட்டர் உள்ளடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு கான்பெட் நிறுவனம் மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான டெண்டர் நேற்று முன்தினம் இறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாநிலத்தில் உள்ள 3,47,090 ரேஷன் கார்டுகளுக்கு வரும் 3ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என கான்பெட் நிறுவனம் அறிவித்துள்ளது.