மேலும் செய்திகள்
குட்கா விற்றவர் கைது
25-Jun-2025
திருபுவனை: மதகடிப்பட்டில் பிரபல ரவுடி ஜனா (எ) ஜனார்த்தனனை திருபுவனை போலீசார் சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.புதுச்சேரியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், ரவுடிகளை கட்டுப்படுத்தவும் 'ஆபரேஷன் திரிசூலம்' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.அதன்படி புதுச்சேரி சீனியர் எஸ்.பி., கலைவாணி உத்தரவுப்படி மேற்குப்பகுதி எஸ்.பி., வம்சிதரெட்டி மேற்பார்வையில், நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வர்மன், திருபுவனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையில் கமாண்டோ படையினர் மற்றும் க்ரைம் போலீசார் அசோக், சத்தியமூர்த்தி அடங்கிய குழுவினர் கலிதீர்த்தாள்குப்பம் சுடலை வீதியை சேர்ந்த பிரபல ரவுடி ஜனா (எ) ஜனார்த்தனன் 36; உள்பட திருபுவனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வரலாற்று குற்றப்பதிவேடுகள் கொண்ட ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.இதில் பிரபல ரவுடி ஜனா 36; திருபுவனையில் உள்ள தொழிற்சாலைகளில் உள்ள அதிகாரிகளை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் அவர் தற்காலிகமாக மறைந்து வாழும் மதகடிப்பட்டு கோகுல் நகர் பகுதியை சுற்றிவலைத்தனர்.போலீசாரைக் கண்டதும், இரண்டாவது மாடியில் ஏறி தப்பிக்க முயன்ற ஜனாவை, போலீசார் சுற்றி வளைத்து, துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 வீச்சருவாள், கூர்மையான கத்திகள் மற்றும் இரும்பு பைப்புகள் நாட்டு வெடிகுண்டு செய்ய வெடி மருந்து, ஆணி, கூழாங்கற்கள், சணல் ஆகியவை கொண்ட பையையும் போலீசார் கைப்பற்றினர்.இது குறித்து திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜனா (எ) ஜனார்த்தனனை புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
25-Jun-2025