ஆபாச பேச்சு : 5 பேர் கைது
புதுச்சேரி: சேதராப்பட்டு பிப்டிக் தொழி ற்சாலை அருகே நேற்று முன்தினம் நின்று கொண்டு பொதுமக்களை ஆபாசமாக பேசிய, விழுப்புரம் அடுத்த நல்லாவூர் பகுதியை சேர்ந்த நித்திஷ், 19; என்பவரை சேதராப்பட்டு, போலீசார் கைது செய்தனர். அதே போல், காட்டேரிக்குப்பம் எல்.ஆர்., பாளையம் சந்திப்பில் நின்று கொண்டு ஆபாசமாக பேசிய, வாதனுாரை சேர்ந்த பிரபாகரன், 30, என்பவரை காட்டேரிக்குப்பம் போலீசார் கைது செய்தனர். மங்கலம் உறுவையாறு மெயின் ரோட்டில், ஆபாசமாக பேசிக் கொண்டிருந்த செல்லஞ்சேரி கஜேந்திரன், 32; என்பரை மங்கலம் போலீசார் கைது செய்தனர். முதலியார்பேட்டை பைபாசில், நின்று கொண்டு ஆபாசமா பேசிய, அரும்பார்த்தபுரம் சந்துரு, 24; மற்றும் நுாறடி சாலையில் ஆபாசமா பேசிய கடலுார், துாக்கணாம்பாக்கம் ஜீவா, 21, ஆகியோரை முதலியார்பேட்டை போலீசார் கைது செய்தனர்.