அமைச்சருக்கு எதிராக போஸ்டர் சமூக அமைப்புகள் மீது வழக்கு
புதுச்சேரி : அமைச்சருக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய சமூக அமைப்புக்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் உட்பட 3 பேர் கடந்த வாரம் சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, காரைக்கால் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து புதுச்சேரி முழுதும் பொதுப்பணித்துறை அமைச்சரை விமர்சித்தும், ராஜினாமா செய்ய வலியுறுத்தியும், பல்வேறு அமைப்புக்கள் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.இந்நிலையில் ராஜ்பவன் தொகுதி என்.ஆர்., காங்., நிர்வாகிகள் நேற்று முன்தினம் பெரியக்கடை போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில், பெரியார் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.