மேலும் செய்திகள்
திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை
22-Aug-2025
புதுச்சேரி: புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் நடந்த அரசு பணி தேர்வுக்கான இலவச பயிற்சி முகாமில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. புதுச்சேரி தமிழ்ச் சங்க வளாகத்தில் அரசு பணிக்கான எழுத்து தேர்வு பயிற்சி முகாம் கடந்த 4 நாட்களாக நடத்தப்பட்டு வந்தன. பயிற்சியின் நிறைவு விழா தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து தலைமையில் நடந்தது. விழாவில், சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் கலந்து கொண்டு, பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். எழுத்தாளர் அரிமதி இளம்பரிதி, டாக்டர்கள் சுகன், விக்னேஷ், ராஜராஜேஸ்வரி மற்றும் சந்தியா, இந்துமதி, சதீஷ் தேவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
22-Aug-2025