உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பாகூர் மூலநாதர் கோவிலில் பரதநாட்டிய மாணவிகளுக்கு பாராட்டு

 பாகூர் மூலநாதர் கோவிலில் பரதநாட்டிய மாணவிகளுக்கு பாராட்டு

பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், மகா சிவராத்திரி விழாவையொட்டி நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. பாகூரில் உள்ள பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, பரத நாட்டியம், வயலின், இசை கச்சேரி, யோகா உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், பங்கேற்ற கலை குழுவினருக்கு, கோவில் நிர்வாக அதிகாரி சிவக்குமார் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ