மேலும் செய்திகள்
பிரதோஷ வழிபாடு
07-Nov-2026
நாளை (நவ.22)இனிதாக: திருவள்ளூர்
21-Nov-2026
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், கார்த்திகை மாத முதல் பிரதோஷ வழிபாடு நடந்தது. பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், கார்த்திகை மாத முதல் பிரதோஷ வழிபாடு இன்று (நவ.,22) நடந்தது. இதனையொட்டி, காலை 9:00 மணிக்கு வேதாம்பிகையம்மன், மூலநாதர், பால விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 4:30 மணிக்கு கார்த்திகை முதல் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில், கோவில் கொடிமரம் எதிரே, அருள் பாலிக்கும் செல்வ நந்தி பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக சிவக்குமார், சிவாச்சார்யார்கள் சங்கர நாராயணன், பாபு ஆகியோர் செய்திருந்தனர்.
07-Nov-2026
21-Nov-2026