உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  குருத்தோலைஞாயிறையொட்டி தேவாலயங்களில் பிரார்த்தனை

 குருத்தோலைஞாயிறையொட்டி தேவாலயங்களில் பிரார்த்தனை

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று குருத்தோலை ஞாயிறையொட்டி கிறிஸ்துவர்கள் கைகளில் குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். மேலும், தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது. கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கப் படுகிறது. நேற்று குருத்தோலை ஞாயிறை யொட்டி, புதுச்சேரியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது. குறிப்பாக, ரயில் நிலையம் அருகில் உள்ள இருதய ஆண்டவர் பசிலிக்காவில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர். அதே போன்று, ரெட்டியார்பாளை யம் புனித அந்திரேயர் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற் றது. இதில் கிறிஸ்தவர்கள் கலந்து - கொண்டு குருத்தோலையை கையில் ஏந்தி இயேசு கிறிஸ்துவின் பாடல்களை - பாடியபடி வீதி வீதியாக - சென்றனர். உழவர்கரை ஜெயராக் கினி அன்னை ஆலயம், கதிட்ரல் ஆலயம், நெல் லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலயம், மிஷன் வீதி ஜென்மராக்கினி ஆல யம், வில்லியனூர் லூர்து அன்னை ஆலயம் உள் ளிட்ட அனைத்து ஆலயங்க ளிலும் நடைபெற்ற சிறப்பு - திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவா கள் கலந்து கொண்டு குருத்தோலை ஏந்தி இயேசு கிறிஸ் துவின் பாடல்களை பாடி புதுச்சேரி நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாகச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை