உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முன்மழலையர் பள்ளி ஆண்டு விழா

முன்மழலையர் பள்ளி ஆண்டு விழா

புதுச்சேரி: புதுச்சேரி ரெயின்போ நகர் 4வது கிராசில் இயங்கி வரும் பஸ்ட் கிரை இன்டலஜிட்ஸ் முன் மழலையர் பள்ளி ஆண்டு விழா நடந்தது.புதுச்சேரி கருவடி குப்பம் சித்தானந்தா கோவில் அருகில் அமைந்துள்ள புதுச்சேரி மருந்தாளுனர் சங்க கட்டடத்தின் முதல் தளத்தில் நடந்த விழாவிற்கு, பள்ளி முதல்வர் அருள்நந்தன் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பளாக ஜான்குமார் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு சிறுவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.விழாவில், பள்ளி குழந்தைகள், பள்ளி நிர்வாகிகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை