உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி தவளக்குப்பத்தில் 18ல் துவக்கம்

பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி தவளக்குப்பத்தில் 18ல் துவக்கம்

அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி, வரும் 18ம் தேதி, துவங்குகிறது.தவளக்குப்பம் பிரிமியர் லீக் கிரிக்கெட் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், கிரிக்கெட் வீரர்களுக்காக கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 3ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிக்கான ஏலம், கடந்த மாதம் தவளக்குப்பம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த போட்டி, வரும் 18ம் தேதி முதல் ஏப்ரல் 18ம் வரை, தவளக்குப்பம் தனியார் டீ துாள் கம்பெனி, அருகே உள்ள மைதானத்தில் நடக்கிறது.சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மட்டும் நடக்கும் போட்டி, காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும், அதன் பின்னர் 1:30 மணி முதல் மாலை 5:00 மணிவரை நடக்கிறது. இந்த போட்டியில், பூரணாங்குப்பம், இடையார்பாளையம், கொருக்கன்மேடு, தானாம்பாளையம், அபிேஷகப்பாக்கம், புதுக்குப்பம், நல்லவாடு, ஆண்டியார்பாளையம், பிள்ளையார்திட்டு, காட்டுப்பாளையம் ஆகிய கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு, பரிசு வழங்கப்பட உள்ளது, என, பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடத்தும், ஒருங்கிணைப்பாளர் உதயா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை