உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளி மாணவர்கள் பொங்கல் வாழ்த்து மடல் தயாரிப்பு

அரசு பள்ளி மாணவர்கள் பொங்கல் வாழ்த்து மடல் தயாரிப்பு

புதுச்சேரி : திரு.வி.க., உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், நவீன அறிவியல் வளர்ச்சியால் மறக்கப்பட்ட பொங்கல் வாழ்த்து மடல் அனுப்பும் முறையை மீண்டும் செயல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு உள்ளனர். தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் விழா கரும்பு, மாடு, புத்தாடை என அவற்றின் சிறப்புகள் நீண்டு கொண்டே செல்லும். அதில், பொங்கல் வாழ்த்து மடல் அட்டை அனுப்பும் முறையும் ஒன்றாக இருந்தது.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சிறியவர் முதல் பெரியவர் வரை ஆர்வத்துடன் பொங்கல் வாழ்த்து அட்டைகளை கடைகளில் வாங்கி, நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி மகிழ்ந்தனர். ஆனால், நவீன அறிவியல் வளர்ச்சியின் காரணமாக வாட்ஸ் ஆப், பேஸ் புக், இன்ஸ்டா கிராம் போன்ற சமூக ஊடகங்களின் ஆதிக்கத்தால், பொங்கல் வாழ்த்து மடல் அனுப்பும் வழக்கத்தையே மறந்தும் விட்டோம்.அப்படி மறக்கப்பட்ட வாழ்த்து அட்டை அனுப்பும் அழகான வழக்கத்தை மீட்டெடுக்கும் பணியில் அரும்பார்த்தபுரம் திரு.வி.க., அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இறங்கியுள்ளனர். ஓவிய ஆசிரியர் அன்பழகனின் வழிகாட்டுதலின்படி, மாணவர்கள் தங்கள் கைகளினால் பொங்கல் வாழ்த்து மடலை தயாரித்து, அதில் பல வண்ண ஓவியங்களை வரைந்து, அதன் உள்ளே பொங்கல் வாழ்த்து கவிதைகளை எழுதி, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அனுப்பினர்.பொங்கல் வாழ்த்து மடலை தயார் செய்த அனைத்து மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் வாசு பாராட்டி ஊக்கப்படுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை