உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கைப்பந்து போட்டியில் பிரசிடென்சி பள்ளி முதலிடம்

கைப்பந்து போட்டியில் பிரசிடென்சி பள்ளி முதலிடம்

புதுச்சேரி : ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், கல்வித்துறை சார்பில் நடந்த கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். புதுச்சேரி பள்ளி கல்வித்துறை சார்பில் 2ம் வட்டம் அளவிலான 17 வயத்திற்கு உட்பட மாணவர்களுக்கான கைப்பந்து போட்டிகள் நடந்தது. இப்போட்டியில், ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி அணி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இதில், பள்ளியின் பிளஸ் 1 மாணவர்கள் தியாகராஜன், சாருஹாசன், மணியரசு, முகமது ரித்திக், ரோகன், கிேஷார், நவீன்ராஜ், அவினேஷ், சரண் தரனேஸ்வரன், கமலேஷ், மனோஜ், பாலாஜி, ஸ்ரீதர் ஆகிய மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் டாக்டர் கிறிஸ்டிராஜ், முதல்வர் ஜெயந்திராணி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இதில், துணை முதல்வர் ஆரோக்யதாஸ், உடற்கல்வி ஆசிரியர் பிரபு மற்றும் ஆசிரியர்கள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி