பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி
புதுச்சேரி: முதலியார்பேட்டையில் பிரதமர் மோடியின் 140வது மனத்தின் குரல் நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பு முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் தலைமையில் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடும் மனதின் குரல் 140வது நிகழ்ச்சி இன்று (நவ.,29) காலை நாடு முழுதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, முதலியார்பேட்டை தொகுதி ரங்கநாயகி மஹாலில் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் தலைமை தாங்கி, பிரதமரின் நேரடி ஒளிபரப்பை பார்வையிட்டார். இதில், மாநில மனதின் குரல் பொறுப்பாளர், வில்லியனுார் மாவட்ட பொறுப்பாளர் வெற்றிச்செல்வம், 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.