உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரதமர் பிறந்த நாள் விழா ரத்த தான முகாம்

பிரதமர் பிறந்த நாள் விழா ரத்த தான முகாம்

புதுச்சேரி: பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, பா.ஜ.,சார்பில் அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரியில் ரத்த தான முகாம் நடந்தது. முகாமை மங்களம் தொகுதி தலைவர் சபரிகிரிசன் ரத்த தானம் வழங்கி தொடங்கி வைத்தார். மாநில மனிதின் குரல் பொறுப்பாளர் வெற்றிச்செல்வம் 106 வது முறையாக ரத்த தானம் வழங்கினார். மாநிலத் தலைவர் ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம், சேவை நிகழ்ச்சியின் பொறுப்பாளர்கள் முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடேசன், மாநிலத் துணைத் தலைவர்கள் ஜெயலட்சுமி, சரவணன், மாவட்டத் தலைவர் அனிதா, மங்கலம் தொகுதி பொறுப்பாளர் கண்ணபிரான், மாநில ஓ.பி.சி., அணி பொதுச் செயலாளர் சிவசெந்தில், மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் பிரியா உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் 106 முறை ரத்ததானம் வழங்கிய வெற்றிச்செல்வம் உட்பட ரத்தானம் வழங்கியவர்களை முக்கிய நிர்வாகிகள் பாராட்டினார். மருத்துவமனை நிர்வாகம் ரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !