உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பிரதமரின் சூரிய மின்னொளி திட்டம் இன்று 2 இடங்களில் சிறப்பு முகாம்

 பிரதமரின் சூரிய மின்னொளி திட்டம் இன்று 2 இடங்களில் சிறப்பு முகாம்

புதுச்சேரி: பிரதமரின் சூரிய மின்னொளி திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் இன்று 21ம் தேதி இரு இடங்களில் நடக்கிறது. இதுகுறித்து மின்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி மின்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையும் இணைந்து பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் வீடுகளில் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க ஒரு கிலோ வாட்டிற்கு ரூ.30 ஆயிரமும், 2 கிலோ வாட்டிற்கு ரூ.60 ஆயிரமும், 3 கிலோ வாட்டிற்கு ரூ.78 ஆயிரம் மானியமாக மத்திய அரசு வழங்கி வருகிறது. தற்போது புதுச்சேரி அரசு கூடுதல் மானியமாக ஒரு கிலோ வாட்டிற்கு ரூ.10 ஆயிரமும், 2 கிலோ வாட்டிற்கு ரூ.20 ஆயிரமும், 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேல் ரூ.30 ஆயிரம் மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 2,509 மின் நுகர்வோர் தங்கள் வீடுகளில் சூரிய மின் திட்டத்தை அமைத்துள்ளனர். இவர்களுக்கு ரூ.17.55 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கிடும் பொருட்டு இன்று 21ம் தேதி மேட்டுப்பாளையம் பாக்யா மகாலிலும், வீமகவுண்டன்பாளையம் சுப்பையா திருமண நிலையத்திலும் காலை 10:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை சிறப்பு முகாம் நடக்கிறது. முகாமில், திட்டத்தின் சிறப்புகள், செயல்முறை மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும். முகாமில் பதிவு செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் விவரம் வேண்டுவோர் 94890 80373, 94890 80374 ஆகிய மொபைல் எண்கள் அல்லது py.gov.inஎன்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ