டிரைவருக்கு பீர் பாட்டில் குத்து தனியார் பஸ் கண்டக்டர் கைது
திருபுவனை : திருபுவனை அருகே டைமிங் தகராரில் பஸ் டிரைவரை பீர் பாட்டலால் குத்தி ,கொலை மிரட்டல் விடுத்த கண்டக்ரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியில் இருந்து மதகடிப்பட்டு வழியே திருக்கனுார் செல்லும் தனியார் பஸ்சில் விழுப்புரம் மாவட்டம் குமளம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் ,33; டிரைவராக சென்றார். அதே ஊரைச் சேர்ந்த கோபி. 45; கண்டக்டர். கடந்த 29ம் தேதி காலை, 7.50 மணிக்கு அந்த பஸ் திருக்கனுாரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்றுகொண்டிருந்தது. திருவாண்டார்கோயில் இந்திரா நகர் பஸ் நிறுத்தத்தில் டிரைவர் வெங்கடேஷ் பஸ்சை நிறுத்தினார். அப்போது பின்னாள் வந்த தனியார் பஸ் கண்டக்டரான கண்டமஙகலத்தை சேர்ந்த பாப மகன் விக்னேஸ்வரன் 25;பஸ்சில் இருந்து இறங்கி முன்னாள் சென்ற பஸ்சை வழிமறித்து, டிரைவர் மற்றும் கண்டக்டரை தரக்குறைவாக பேசி பீர் பாட்டிலை உடைத்து, டிரைவர் வெங்கடேசனை குத்தி,கொலை மிரட்டல் விடுத்தார். இதில் படுகாயமடைந்த வெங்கடேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருபுவனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் பின் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கண்டக்டர் கோபி, 45; புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து விக்னேஸ்வரனை 25; கைது செய்து, புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்னர்.