உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தனியார் கம்பெனி ஊழியர் மாயம்

தனியார் கம்பெனி ஊழியர் மாயம்

புதுச்சேரி: தனியார் கம்பெனியில் வேலை செய்த ஊழியர் காணாமல் போனது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.கொம்பாக்கம், செட்டிக்குளத்தை சேர்ந்தவர் ராமநாதன், 35. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். தனது மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் இவர், கடந்த 22ம் தேதி, வேலைக்கு செல்வதாக, வில்லியனுாரில் உள்ள தனது சகோதரியிடம் கூறி விட்டு சென்றார். இரவு வரை, சாப்பிட வராததால், சந்தேகமடைந்த, அவர் கொம்பாக்கத்தில், தங்கியிருந்த அவரது விட்டுக்கு சென்று பார்த்தார்.வீட்டில் மொபைல் போன், சைக்கிள் மட்டும் இருந்தது. அவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது சகோதரி சந்திரகலா, கொடுத்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ